விண்கலத்தின் இறுதிச்சடங்கு

அறிவியல் தமிழ்

இணைய பயணம்

கடந்த இரண்டு பத்தாண்டுகளாக மொத்த உலக மக்கள் தொகையில் ஒருசிலர் பூமியில் காணப்படவில்லை. ஏனெனில், அவர்கள் நிலப்பரப்பில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 27,500 கிலோமீட்டர் வேகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். ஆம், International Space Station என்கிற பன்னாட்டு விண்வெளி நிலையம்தான் அவர்களின் இருப்பிடம். 100 மீட்டர் நீளமுடைய இந்த மிதக்கும் ஆய்வு நிலையம் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் பங்களிப்பால் சாத்தியமாயிற்று.

விண்ணில் மிதக்கும் ஆய்வகம் ISS

நுண்ணீர்ப்பு (microgravity), விண் உயிரியல் (space biology), மனித உடல் இயங்கியல் (human physiology) மற்றும் அடிப்படை இயற்பியல் குறித்த ஆய்வுகளுக்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது ISS. மேலும், பிற கோள்களுக்கும் தொலைவில் உள்ள விண்ணிடங்களுக்கும் செல்வதற்கான ஆராய்ச்சியின் முதல் படியாகவும் இது திகழ்கிறது.

வயசு ஆகுதில்ல…

எல்லாவற்றுக்கும் முடிவு ஒன்று உண்டல்லவா? இந்த விண்வெளி நிலையமும் அதற்கு விதிவிலக்கல்ல. 2031-ஆம் ஆண்டு வாக்கில் இதற்குப் பிரியாவிடை அளிக்க முடிவு செய்திருக்கிறது நாசா. இவ்வளவு முக்கியமான ஆய்வு நிலையத்தை ஏன் அழிக்க வேண்டும் என்கிறீர்களா? வயது மூப்புதான் காரணம். 1990களில் அமைக்கப்பெற்ற இந்த மிதக்கும் ஆய்வகத்தின் பல்வேறு பாகங்கள் பல்வேறு காலகட்டங்களில் மாற்றவும் சரிசெய்யவும் பட்டுள்ளன. இருப்பினும், கடந்த 32 ஆண்டுகளாக இரவு பகலாக தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு ஒருமுறை உலகை வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு இயந்திரம் பல தேய்மானங்களையும் சேதாரங்களையும் சந்திக்க நேரிடுகிறது…

View original post 167 more words

நிரந்தரம்

சிங்கங்கள் வாழைப்பழம் உண்கின்றன
பசுவிற்கு உணவாகிறது நீர்யானை
நீரில் நீந்துகின்றன
டைனோசாரும் எருமையும்
ஒன்றாய்.

இவையெல்லாம்
இவள் பேச்சைக் கேட்டுக் கொண்டும்
இவளிடம் தீனி வாங்கித்
தின்று கொண்டும்
மகிழ்ச்சியாகவே உள்ளன.

அவள் விளையாட்டுப் பொருளோடு
ஒன்றாய் நானும்
மலையாகவும் வீடாகவும்
பாலமாகவும் மாறிப் போகிறேன்.

முடியாமல் நிகழ்ந்து கொண்டே
இருக்கிறது
இந்தத் தருணம்.
என்றென்றும்.

காடு

காட்டுடன் வீட்டைக் கலந்து வாழ்ந்தான்
சேற்றிலும் நின்றான்
தீயில் சுட்டுச் சுட்டுத் தின்றான்

நாகரிகம் நாகரிகம் என்றான்
நகரம் வந்தான்
தீயில்லை இங்கு
ஆனால் வேகிறது மனது

சிரிப்பில்லை
நட்பில்லை
நீரில்லை
காடில்லை

எல்லாம் செயற்கை
எங்கும் இரும்பு
வீடு மட்டுமல்ல
வாழும் மனிதரும் கூட

நகரமில்லை இது
நாடாத நாடு
நாட்டம் காட்டாத நாடு
நாடு.

காடு.

துளிர்ப்பு

மழை நீர் கண்ட
நிலத்தின் புல்லாய்
உனைக் கண்ட
என் மனக் காதல்

வானவில்

மழைக் குளியலின்பின்
வானம் அணியும்
புத்தாடை