குறுக்கெழுத்துப் போட்டி விடைகள்
ஆகஸ்ட் 29, 2011 கருத்துத் தெரிவிக்கவும்
சென்ற வாரம் நான் பதித்த கு. போ.வுக்கு உலகமெங்கும் இருந்து ரசிக கோடிகளின் அஞ்சல்கள் வந்தவண்ணம் உள்ளன. எங்கள் ஊர் அஞ்சல் அலுவலகத்தில் கூடுதல் ஆட்கள் என்னுடைய சொந்த செலவில் அமைத்து இந்த அஞ்சல்களை மூட்டை கட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐரீன் சூறாவளியும் சேர்ந்து கொண்ட காரணத்தால் நான் விடைகளை வெளியிடுவதாக முடிவு செய்து விட்டேன். இனி யாரும் இதற்கு விடைகளை அனுப்ப வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
விஜய்யும், கலையரசியும் ஏற்கனவே தத்தமது விடைகளை அனுப்பி விட்டனர். அவலூர்பேட்டையில் எனது உற்றார் உறவினர் பெரும்பாலான (அனைத்து) விடைகளைக் கண்டறிந்து விட்டனர்.
குவளை, இலச்சினை, மரியாதை ராமன், திரிசடை போன்ற விடைகள் மட்டும் சற்று சிரமமாக இருந்தது போலும்.
இதோ விடைகள்.
