குறுக்கெழுத்துப் போட்டி
ஆகஸ்ட் 22, 2011 3 மறுமொழிகள்
நண்பர் விஜய் நெடுங்காலமாகவே குறுக்கெழுத்துப் போட்டிகளை வரைந்து வருகிறார்… நாமும் ஒருமுறை முயற்சித்துப் பார்ப்போமே என்றதன் விளைவுதான் இங்கே உள்ள இந்த குறுக்கெழுத்துப் போட்டி. இதுதான் என்னுடைய முதல் முயற்சி. சற்று நீளமாகவும், சில்லறைத்தனமாகவும் இருக்கும் இந்தப் புதிரினை மன்னித்து அருளவும்.
இனி புதிருக்குப் போவோம்.
1. சிறுவர் சிறுமியர் பாடப் புத்தகங்கள் இன்றி இரண்டு மாதங்கள் அமர்ந்திருந்த இடம் (7).
4. சட்டத்திற்குள் அடங்காதது (2, 4).
6. பண்டைய அரசர்கள் பலப்பரீட்சை செய்த இடம் (6).
8. இந்த மாதத்தின் நிலவிற்கு மட்டும் அத்தனை சிறப்பு – கொண்டாட்டங்கள் சற்று அதிகம் (4).
9. சொம்பு – இந்தப் பெயரில் பூ கூட உண்டு (3)
11. மெய் (3).
13. இந்த சொர்க்கம் சற்று குழப்பமானது (5).
14. காபி (4).
17. ராமாயணத்தில் ஒரு நல்ல ராட்சசி (4).
18. விரைவான கேள்வி-பதில் (3, 2).
20. தெனாலியில் பிறந்த விகடகவிக்கு மதிப்பு (4, 3).
22. விண்மீன்கள் பளிச்சிடும் நேரம் (5).
23. மேலே உள்ள கட்டங்கள் ஒரு _____ (3).
மேலிருந்து கீழ்
1. இதிலுள்ள வட்டங்கள் சினேகாவிற்கு ஒரு ரூபாய் நாணயம் போல் தெரிந்ததாம் (6).
2. சில்லென்று குண்டுமல்லி கிடைக்கும் இடம் (4).
3. நிறுவனங்களுக்கும், அரசாங்கங்களுக்கும், சில சமயத்தில் தனியொருவருக்கும் கூட இது இருப்பதுண்டு. அனுமன் சீதைக்குக் காட்டிய மோதிரம் கூட இவ்வகையைச் சார்ந்ததுதான் (5).
4. கூறு, புகர் (4).
5. தங்கத்தின் தரமறிய இது தேவை (4)
7. அய்யன் திருவள்ளுவர் நிற்கும் இடம் (7).
10. நடிகைகள் தங்கள் கவர்ச்சியில் இது இல்லை என்று சத்தியம் செய்வார்கள் (4).
12. உண்ணும் உணவு உடலினுள் இந்த மாற்றத்துக்கு உட்படுகிறது (5).
13. மீனாவும் பத்மினியும் நடனமாடிய ராகம் (4).
15. இவர்களைப் பார்க்காத ஆண்கள் பேராண்மை கொண்டவர்கள் (5).
16. (மழை) (4).
19. கேள், விசாரி (3).
21. புதுக்கவிதைகள் இவ்விலக்கணத்திற்குக் கட்டுப்படாதவை (3).

I was not able to comment in your recent post ? and so many other links also are not working?
அடைமழை அருமை.
Please join kurukkumnedukkum@googlegroups.com.
Also can you please mail me at poongs d0t seenu at gmail.com, I will give details on the software for building/solving Tamil crossword, which we are using currently.
The other link must work now.
Sorry I hadn’t noticed that before.
Pingback: குறுக்கெழுத்துப் போட்டி விடைகள் « மதி. லோகேஷ் பக்கம்